DreamPirates > Lyrics > Anjali Anjali Song Lyrics

Anjali Anjali Song Lyrics

Author: DreamPirates | Last Updated : 2023-11-04 16:04:22

Anjali Anjali Song Lyrics

Anjali Anjali Song  Lyrics
Film/Album :
Language : NA
Lyrics by : Vairamurthu
Singer : S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Composer : A. R. Rahman
Publish Date : 2023-11-04 16:04:22


Song Lyrics :

அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி

பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் கானா அழகிற்கு கவிதாஞ்சலி

அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி

பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் கானா அழகிற்கு கவிதாஞ்சலி

காதல் வந்து தீண்டும் வரை இருவரும் தனி தனி
காதலின் பொன் சங்கிலி இணைத்தது கண்மணி
கடலிலே மழை வீழ்ந்தபின் எந்த துளி மழைத்துளி
காதலில் அதுபோல நான் கலந்திட்டேன் காதலி

திருமகள் திருப்பாதம் பிடித்துவிட்டேன்
தினம் ஒரு புதுப்பாடல் வடித்துவிட்டேன்
அஞ்சலி அஞ்சலி என் உயிர் காதலி

பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் கானா அழகிற்கு கவிதாஞ்சலி

அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி

பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் கானா அழகிற்கு கவிதாஞ்சலி

சீதையின் காதல் அன்று விழி வழி நுழைந்தது
கோதையின் காதல் இன்று செவி வழி புகுந்தது
என்னவோ என் நெஞ்சினை இசை வந்து துளைத்தது
இசை வந்த பாதை வழி தமிழ் மெல்ல நுழைந்தது

இசை வந்த திசை பார்த்து மனம் குழைத்தேன்
தமிழ் வந்த திசை பார்த்து உயிர் கசிந்தேன்
அஞ்சலி அஞ்சலி இவள் கலை காதலி

அன்பே உன் அன்புக்கு புஷ்பாஞ்சலி
நண்பா உன் கருத்துக்கு நடனாஞ்சலி
கண்ணா உன் இசை வாழ கீதாஞ்சலி
கவியே உன் தமிழ் வாழ கவிதாஞ்சலி

அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி

பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் கானா அழகிற்கு கவிதாஞ்சலி

அழகியே உன்னை போலவே அதிசயம் இல்லையே
அஞ்சலி பேரை சொன்னேன் அவிழ்ந்தது முல்லையே
கார்த்திகை மாதம் போனால் கடும் மழை இல்லையே
கண்மணி நீ இல்லையேல் கவிதைகள் இல்லையே

நீயென்ன நிலவோடு பிறந்தவளா
பூவுக்குள் கருவாகி வளர்ந்தவளா
அஞ்சலி அஞ்சலி என் உயிர் காதலி

பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் கானா அழகிற்கு கவிதாஞ்சலி

அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி

பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் கானா அழகிற்கு கவிதாஞ்சலி

Tag : lyrics

Watch Youtube Video

Anjali Anjali Song  Lyrics

Relative Posts